Thursday 17 May 2018

தென் மாவட்டங்களை வளைக்கும் தினகரன் ..!


தென் மாவட்டங்களில் தினகரன் கொடி பறக்கிறது .!
நெல்லை,கன்னியாகுமரி,தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களில் தினகரன் கை நாளுக்கு நாள் ஓங்கி வருகிறது . 
குமரி மாவட்ட முன்னாள்  அமைச்சரும் தற்போதைய குமரி மாவட்ட செயலருமான பச்சைமால் தலைமையில் களியக்காவிளை முதல்,காவல் கிணறு வரை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு வார்டு கமிட்டி கிளை கழகம் ஒன்றியம் மாவட்ட பொறுப்புகளுக்கு திறமையானவர்களை 




கண்டறிந்து அவர்களுக்கு பொறுப்புகள் வழங்கியதோடு அவர்களின் ஒத்துழைப்போடு பிரமாண்டமான பொதுக்கூட்டம்  ஒன்றை நடத்தி தினகரனை திணறடித்து விட்டார் . மீனவ மக்கள் இடையே அதிகப்படியான செல்வாக்கை  பெற்றுள்ள பச்சைமால் மீனவ மக்களின் ஆதரவையும் தினகரன் பக்கம் கொண்டு வந்து விட்டார்.குறிப்பாக அதிமுகவின் மருத்துவ அணி இணை செயலாளர் ஜோசை கழகத்தில் இணைத்து விட்டார் பச்சைமால்  இதற்கு காரணம் அதிமுக மாவட்ட செயலர் விஜயகுமார் தொண்டர்களை அனைத்து செல்லவில்லை என்று கூறப்படுகிறது .

முத்து நகர் தூத்துக்குடி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தெற்கு மாவட்ட செயலாளர் ஹென்றி . அனைத்து சட்டமன்ற தொகுதிகளில் உள்ள தொண்டர்களையும் டிடிவி பக்கம் கொண்டு  வந்து விட்டார்.இதில் தானா சேர்ந்த கூட்டம்தான் அதிகம் , மக்கள் உயிரோடு விளையாடும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான கூட்டத்தில் தூதுக்குடியையே அதிர வைத்து விட்டார்கள்.



ஸ்டெர்லைட் எதிர்ப்பு அமமுக பொதுக்கூட்டம் விகடன் செய்தியில் 


தினகரனுடன் ஹென்றி ஒன் தமிழ் செய்தி 

தந்தி டிவி யில் 

 கூட்டுறவு சங்க தேர்தலில் அநியாயத்தை தட்டி கேட்டதற்காக  போலிஸ்காரர்களால் பொய் வழக்கு போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் ஹென்றி.கடந்த எட்டாம் தேதி சிறையை விட்டு அவர் வெளியே வந்தபோது தொண்டர்களும் பொது மக்களும் பிரமாண்டமான வரவேற்ப்பு கொடுத்து எதற்கும் துணிந்தவர்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் என்பதை காட்டினார்கள். 
 தினகரன் பேரவை தூத்துக்குடி மாவட்ட செயலரான சொர்ணலட்சுமியும் மக்கள் செலவர் புகழ் பரப்பி ஏராளமானவர்களை
 டிடிவி கட்சியில் இணைத்து வருகிறார் . 
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை மாநகர் மாவட்ட செயலராக இருப்பவர் கல்லார் வேலாயுதம் பொறுமை  திறமை என கலக்குபவர்  முன்னால் அமைச்சர் நயினார் நாகேந்திரன் கூடாரத்தில் பாடம் பயின்றவர் ..மாநகரத்தில் டிடிவிக்கு தனி செல்வாக்கினை  கொண்டு வந்து விட்டார் .


பாப்புலர் முத்தைய்யா 


நெல்லை புறநகர் மாவட்டதின்  மாவட்ட செயலராக இருப்பவர் பாப்புலர் முத்தையா அவைத்தலைவராக இருப்பவர் பொய்கை மாரியப்பன் மாவட்ட துணை செயலாரக இருப்பவர் வி பி மூர்த்தி இப்படி பல ஜாம்பவான்கள் இருப்பதால் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் இல்லங்களின்  சுக துக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருவதால் தொண்டர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள் . தென் மாவட்டதினை  பொறுத்தவரை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினரின் செல்வாக்கு உயர்ந்து வருகிறது.



கீழே செய்திகள் :
நன்றி : தமிழக அரசியல் வார இதழ் 
19/05/2018 நிருபர் . எம் .ரமேஷ் .


தமிழக அரசியலில் வார இதழில் தென் மாவட்டங்களில் அமமுக வின் செல்வாக்கு பற்றிய கட்டுரை 


ஸ்டெர்லைட் ஒழியுமா ?



ஸ்டெர்லைட்  நாயகன் தினகரன் ..!

டிடிவி தினகரன் 



அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக ஸ்டெர்லைட் ஆர்ப்பாட்டத்திற்காக உருவாக்கப்பட்ட ஹாஸ்டேக்குகள் ..! 


           


https://4.bp.blogspot.com/-GxHmcqzQeag/Wv3n4a3At2I/AAAAAAAAGY0/eYVnj28ez5EVnnfyjLRuTFrhoz0_mQQ2wCLcBGAs/s320/sterlite%2Bttv%2B1.jpg


ஸ்டெர்லைட் போராட்டத்தில் 

https://2.bp.blogspot.com/-dD8hpWrfh6w/Wv3n6IxqgPI/AAAAAAAAGY8/ohwdf8R6s5g4Ib-r4KY3Wvz8Gsaz9cInwCLcBGAs/s1600/sterlite%2Bttv%2B4.jpg
ஸ்டெர்லைட் டிடிவி போராட்ட கள சுவரொட்டிகள் 

https://3.bp.blogspot.com/-r7nIK_F0lTA/Wv3fPUo3apI/AAAAAAAAGYg/SEuYs0Q4o3QWtbdvlVQtJowQmL52GIz_ACEwYBhgL/s320/henri%2Bwith%2Bttv.jpg
ஸ்டெர்லைட் போராட்ட முடிவில் செய்தியாளர் சந்திப்பு  






https://img1.blogblog.com/img/video_object.png
ஸ்டெர்லைட் ஆர்பாட்டம் நடத்தபோவதாக தந்தி டிவிக்கு பேட்டி 

https://youtu.be/tQs1d7pmZnM?t=24





தூத்துக்குடியில் இயங்கி வரும் வேதாந்தாநிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட் ஆலையின் 25 ஆண்டு ஒப்பந்தம், அடுத்த ஆண்டு முடிவடைகிறது. இதற்கிடையே ஆலையின் அடுத்த விரிவாக்கத்திற்காக, அந்நிறுவனம் விரிவாக்கப் பணியினை தொடங்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியாகும் நச்சுப் புகையால், சுற்றுச்சூழல் பாதிப்பதாகவும், கிராம மக்களுக்கு நோய்கள் பரவுவதாகவும் கூறி, ஆலையின் விரிவாக்கத்துக்கு அனுமதிக்க கூடாது என்றும், ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுதவிர ஆலையை மூட வலியுறுத்தி அருகிலுள்ள மீளவிட்டான், பண்டாரம்பட்டி, வடக்கு சங்கரபேரி, தெற்கு வீரபாண்டியபுரம், சில்வர்புரம், மடத்தூர், தபால்தந்தி காலனி உள்ளிட்ட கிராம மக்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை தினமும் பல்வேறு அரசியல் கட்சியினர் பல்வேறு அமைப்பினர் சந்தித்து ஆதரவு தெரிவித்து வந்தனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடாவிட்டால்சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்தார். 
தூத்துக்குடியை மற்ற கட்சிகள் புறக்கணித்தாலும் அந்த மக்களை காக்காமல் விட மாட்டேன் ..! என தினகரன் சூளுரைத்தார் ..!


தூத்துக்குடியில் கண்டன பொதுக்கூட்டம் அமமுக சார்பாக 17/04/2018 அன்று நடத்தப்பட்டது ..! 





டி.டி வி.தினகரன் செய்தியாளர்களிடம், "ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவருக்கும் இருவேறு கருத்து இருக்க வாய்ப்பில்லை. இருவருக்கும் பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோள். இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, தற்காலிக முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம்தான் இந்த ஆலைக்கான விரிவாக்கத்துக்கு அனுமதி அளித்ததாகச் சொல்கிறார்கள்.

"மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, தற்காலிக முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம்தான் இந்த ஆலைக்கான விரிவாக்கத்துக்கு அனுமதி அளித்ததாகச் சொல்கிறார்கள்" என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். 
ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து தினகரன் பேட்டி
ஸ்டெர்லைட் போராட்ட களத்தில் டிடிவி தினகரன்  
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் தூத்துக்குடியில் நடைபெற உள்ள கண்டனப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த டி.டி வி.தினகரன் செய்தியாளர்களிடம், "ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவருக்கும் இருவேறு கருத்து இருக்க வாய்ப்பில்லை. இருவருக்கும் பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோள். இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, தற்காலிக முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம்தான் இந்த ஆலைக்கான விரிவாக்கத்துக்கு அனுமதி அளித்ததாகச் சொல்கிறார்கள்.

தமிழகத்தில் தற்போது நடைபெறும் ஆட்சி மக்கள் விரோத, துரோக ஆட்சியாகவும், மத்திய அரசின் எடுபிடி அரசாகவும்தான் உள்ளது.  நிலம், நீர், காற்று எனப் பஞ்ச பூதங்களுக்கும் கேடு விளைவித்து வருகிறது இந்த ஸ்டெர்லைட் ஆலை. இதன் விரிவாக்கத்தை எதிர்த்தும்தற்போது செயல்பட்டு வரும் முதல் யூனிட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதுதான் மக்களின் கோரிக்கை. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்த அரசு அனுமதி அளிக்கவில்லை. நாங்கள், இந்த ஆலைக்கு எதிராகப் பொதுக்கூட்டம் நடத்தகூட காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. உயர் நீதிமன்ற மதுரைக்கிளை மூலம் அனுமதி பெற்றுதான் பொதுக்கூட்டம் நடத்துகிறோம். தற்போதைய சூழலில், "என்னிடம் ஸ்டெர்லைட் நிர்வாகம் டீல் பேசியது" என  மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது தேவையில்லாதது. மத்திய அமைச்சரவையில் இருக்கும் அவர்தான், மக்களின் போராட்டத்தை அரசுக்கு எடுத்துச் சொல்லி ஆலையை மூட நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். இந்த ஆலை நிரந்தரமாக மூடப்படும் வரை எங்கள் போராட்டம் தொடரும்" என்றார்.

பொதுக்கூட்டத்தில் பேசிய டி.டி.வி., தினகரன் , ``மக்கள் மீது, எந்தவித அக்கறையும் இல்லாமல் மோடியுடன் கூட்டு சேர்ந்து, எடப்பாடியும், பன்னீரும் தமிழகத்துக்கு துரோகம் இழைத்து வருகிறார்கள்.  மோடியோ, தமிழகம் இந்திய வரைபடத்தில்தான்  இருக்கிறது என்கிற நினைவு இல்லாமல், சென்னைக்கு வந்து செல்கிறார். மத்திய அரசு கார்ப்பரேட்டுகளின் அரசாகி, நாசக்கார திட்டங்களை தமிழகத்தில் திணிக்கிறது. அதில் ஒன்றாக, இங்கு இயங்கி வரும்  ஸ்டெர்லைட் ஆலையை,  அரசு மூட வேண்டும். இல்லை என்றால் ஆலையை முற்றுகையிட்டு, அதை மூடும்  வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
பன்னாட்டு நிறுவனங்களால் தமிழகம்சோமாலியாக மாறிவிடும் அவல நிலை உள்ளது. அதை நாம் அனுமதிக்க கூடாது. மக்களுக்கு அச்சம் கொடுக்கிற எந்தத் திட்டமும் நிறைவேற்றப்படக் கூடாது. அப்படி நிறைவேற்றினாலும், அந்தப் பகுதியில் வாழும் மக்களிடம் கருத்துக் கேட்க வேண்டும்.  இந்தக் கண்டன பொதுக்கூட்டம், அரசியல் ஆதாயம் இல்லாமல் மக்களின் பாதுகாப்புக்காக நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் தற்போதைய ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு அ.தி.மு.க-வில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் எங்கள் பக்கம் வந்து விடுவார்கள். யார் நல்ல ஆட்சி கொடுப்பார்கள் என்று மக்களுக்குத் தெரியும். இப்போதே சில எம்.பி-க்களும் எம்.எல்.ஏ-க்களும் என்னிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அண்ணே சீக்கிரம் வந்துர்றோம்என நேரில் பார்க்கும்போதும் சொல்கிறார்கள். எடப்பாடியின் கூடாரம் காலியாகும் நாள் விரைவில் வரும்.  
இரட்டை இலை கிடைத்த மமதையில், இனி  வெற்றி பெற்றுவிடலாம்  என நினைத்து, ஆர்.கே. நகர் தேர்தலை அறிவித்தார்கள். ஆனால், மக்கள் எங்களை ஆதரித்து வெற்றி பெறச் செய்தனர். அங்கு வெற்றி பெற்றதுபோல, எங்கள் மீது போடப்பட்டுள்ள மானநஷ்ட வழக்கிலும் நீதிமன்றத்தில் வெற்றி பெறுவோம். ஸ்டெர்லைட் ஆலையையும், கூடங்குளமும் தென்தமிழகத்தில் இருக்கும் இரண்டு வெடிகுண்டிகள். இவை இரண்டும் மூடப்படவில்லை என்றால் இங்கு மட்டுமல்ல தமிழகத்துக்கே ஆபத்துதான்’’ என்றார். 

ஸ்டெர்லைட் குறித்த ஒரு பார்வை : 
சுற்றுச்சூழலை மாசுபடுத்தி அங்கு வாழும் மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தி வந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை இன்று மூட தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவிட்டது. இதன் படி ஆலையின் சேவையை நிறுத்தும் வேலைகள் ஆயத்தமாகி வருகின்றன. 


தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து அடிக்கடி விசவாயு கசிந்து வந்தது. இதனால் அங்கு வசிக்கும் மக்களுக்கு அடிக்கடி மூச்சுத் திணரல் மற்றும் கண் எரிச்சல் ஏற்ப்பட்டது. மேலும் அப்பகுதியில் உள்ள மரங்களும், செடிகளும் கூட அடிக்கடி வந்தன. இதனால் அப்பகுதி மக்கள் அவ்வப்போது போராட்டங்கள் நடத்தி வந்தனர்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி சமூக ஆர்வலர்கள் தமிழக உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் பேரில், கடந்த 2010ம் ஆண்டு, ஆலையை மூடும் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்தது. ஆனால் ஆலை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததின் பேரில், ஆலை தொடர்ந்து செயல்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 23 ம் தேதி காலை திடீரென விஷ வாயு கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். பலருக்கு கண் எரிச்சல், மூச்சு திணறல் ஏற்பட்டது.
அப்பகுதியில் உள்ள மரம், செடி, கொடிகளும் கருகின. இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து அளவுக்கு அதிகமாக கந்தக டை ஆக்சைடு திறந்து விடப்பட்டதால் இந்த பாதிப்பு ஏற்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை வலியுறுத்தி கடந்த 25-ந்தேதி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர். அதன் பின்னர் 28-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் வைகோ, நல்லகண்ணு, மற்றும் அப்பகுதி உள்பட 2000 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே விஷ வாயு கசிவு குறித்து சோதனை நடத்திய அதிகாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் ஆய்வறிக்கை தாக்கல் செய்தனர். அதனடிப்படையில் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக கருதி தொழிற்சாலையில் உள்ள கந்தக அமில ஆலையை ஏன் மூடக்கூடாது என்று விளக்கம் அளிக்குமாறு ஸ்டெர்லைட் ஆலைக்கு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பினார்.
இந்த நிலையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவின் பேரில் ஸ்டெர்லைட் ஆலை இன்று மூடப்பட்டது. முன்னதாக அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. காற்று மற்றும் நீரை மாசுபடுத்தியதாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் உத்தரவையடுத்து ஸ்டெர்லைட் ஆலையின் மின் இணைப்பை மின் வாரிய ஊழியர்கள் இன்று காலை துண்டித்தனர். ஆலையை முழுமையாக மூடும் பணி நடைபெற்று வருகிறது.
ஆலையை மூடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக ம.தி.மு.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் ஆலையை மூட உத்தரவிடப்பட்டது. இதையடுத்து ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் அந்த தீர்ப்புக்கு இடைக்கால தடை பெற்று செயல்பட்டு வந்தது. 

மேலும் ஸ்டெர்லைட் பற்றி :
வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலைமுதன் முதலில் 1994ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் இரத்தினகிரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டது. காற்றுநிலம்நீர் மாசுபடும் என்று அங்குள்ள விவசாயிகள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியுள்ளனர். ஒரு கட்டத்தில் ஆலையை உடைத்து நொறுக்கியுள்ளனர். அப்போது அந்த மாநிலத்தின் முதல்வரான சரத்பவார்ஆலைக்கான அனுமதியை ரத்து செய்துள்ளார். பின்னர்வேதாந்தா நிறுவனம் குஜராத் கோவா மாநிலங்களில் தொழிற்சாலை அமைக்க முயற்சித்து அது நடைபெறவில்லை. இதன் பின்னர்தமிழ்நாட்டில் தூத்துக்குடிக்கு அருகில் சிப்காட் வளாகத்தில் அ.குமரெட்டியாபுரம்தெற்கு வீரபாண்டியாபுரம் கிராமங்களுக்கு அருகில் 1994 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலை அமைத்திட அடிக்கல் நாட்டினர். இந்த ஆலையில் செம்புக் கம்பி மற்றும் கந்தக அமிலம்பாஸ்பாரிக் அமிலம் ஆகியன உற்பத்தி செய்ய 1995 ஆம் ஆண்டு அனுமதி பெற்று செயல்படத் துவங்கியது. அப்போது ஆலையைப் பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களிடம் ஏற்படவில்லை. இரண்டு ஆண்டுகள் கடந்த பின்பு ஆலையிலிருந்து வரும் நச்சுப் புகை மற்றும் கழிவுகள்நிலத்தடி நீர் மற்றும் காற்று மண்டலம் ஆகியவற்றை மாசுபடுத்தி பெரும் கேடுகளை விளைவிக்கும் என்பதை மக்களால் அறிய முடிந்தது. இந்தப் பின்னணியில்தான்ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சார்பில் 1996 ஆம் ஆண்டு மார்ச் முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. மார்ச் 12 கருப்புக்கொடி போராட்டம்ஏப்ரல் 1இல் ஸ்டெர்லைட் எதிர்ப்பு பேரணி நடைபெற்றது. அதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். 1997 பிப்ரவரி 24இல் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. அப்போது ஆயிரக்கணக்கான மக்களை காவல்துறையினர் கைது செய்தனர். ஆகஸ்ட் 30இல் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
ஆய்வும் ஆலை மூடலும்
1996 
நவம்பரில் ஸ்டெர்லைட் ஆலையை மூடும்படி முதன்முதலாக எதிர்ப்பு இயக்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. 1998 ஆம் ஆண்டு நவம்பர் 23இல் ஸ்டெர்லைட் ஆலையை மூடும்படி சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவில், ‘நீரி’ என்கிற சுற்றுச்சூழலுக்கான பொறியியல் ஆராய்ச்சி மையம் (National Environmental Engineering Research Institute) ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்து அறிக்கல் தாக்கல் செய்யவேண்டுமென உத்தரவிட்டது. தூத்துக்குடி சுற்றுவட்டாரப் பகுதி மற்றும் ஆலை வளாகத்திற்குள் சுமார் இரண்டு மாத காலம் ஆய்வை மேற்கொண்டனர். ஆலை வளாகத்திற்குள் அபாயகரமான நச்சுக் கழிவுகள் எந்த பாதுகாப்பு வசதியும் செய்யப்படாமல் கொட்டப்பட்ட இடத்தை குழுவினர் பார்த்தனர். நிலத்தடிநீர் பாதிப்புகாற்றில் சல்ப்யூரிக் அமிலத்தின் நச்சுத்தன்மை பரவி இருந்ததை கண்டறிந்தனர்.

நீரி குழு நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையின் இரண்டு முக்கிய அம்சங்கள்:

1. ஆலை வளாகத்திலும் அதனைச் சுற்றிலும் உள்ள இடங்களில் நிலத்தடிநீர் பெருமளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது.
2. சுற்றுப்புற கிராமங்களில் நிலத்தடி நீரை ஆய்வு செய்த போது அதில் குரோமியம்தாமிரம்ஈயம்காட்மியம்குளோரைடுபுளோரைடுஆர்சனிக் தாதுப்பொருட்கள் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது. இதனை உட்கொண்டால் அபாயகரமான விளைவுகள் ஏற்படும் ஆபத்து இருக்கிறது. இவ்வாறு நீரி’ அறிக்கை தெரிவித்தது.
இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது.
82 முறை விஷவாயு கசிவு

1999 பிப்ரவரி 23 இல் ஆலை மீண்டும் திறக்கப்பட்டது.
2010 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28இல் சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி எலிபி தர்மாராவ் அமர்வு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடச்சொல்லி தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஆலை நிர்வாகம் இடைக்காலத் தடை பெற்றது.
2013 ஆம் ஆண்டு மார்ச் 23 இல் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து நச்சுப்புகை அதிகமாக வெளியானதால் தூத்துக்குடி பகுதி மக்கள் மற்றும் ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களான அ.குமரெட்டியாபுரம்தெற்கு வீரபாண்டியாபுரம்மாப்பிள்ளையூரணிசங்கரப்பேரிமடத்தூர் பகுதி மக்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சுவாசிக்க சிரமப்பட்டனர். தொண்டைவலிகண்எரிச்சல்முதலான பாதிப்புக்களுக்கு உள்ளானார்கள். பல இடங்களில் மரங்களின் இலைகள்செடிகள்பூக்கள் நிறம் மாறி கருகிப்போகின.
மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதன் விளைவாக விஷவாயு கசிவுக்குப் பின் ஸ்டெர்லைட் ஆலையை மூட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து இக்காலத்தில் 82 முறை விஷவாயு கசிவு ஏற்பட்டுள்ளது என்று தமிழக அரசும் அப்போது குற்றம் சாட்டியது. ஆனாலும், 2013 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பால் ஆலை மீண்டும் செயல்படத் துவங்கியது.
மக்கள் திண்டாட்டம் :
அ.குமரெட்டியாபுரத்தில் சுமார் 250 குடும்பங்களில் 1000 பேர் வசித்து வருகின்றனர். இவர்களின் விளை நிலங்களை குறைந்த விலைக்கு சிப்காட் நிறுவனம் 25 ஆண்டுகளுக்கு முன்பே கையகப்படுத்தியுள்ளது. தற்போது ஊரில் மூன்று பேரிடம் மட்டுமே நிலம் உள்ளது. இந்த ஊரின் எல்லையிலிருந்து ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுச்சுவர் சுமார் 250 மீட்டர் தூரத்தில்தான் உள்ளது. தற்போது இந்த சுற்றுச்சுவருக்கு உள்ளே ஆலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கு மத்தியமாநில அரசுகள் அனுமதி கொடுத்துள்ளன. வேதாந்தா லிமிடெட் காப்பர் ஸ்மல்டர் பிளாண்ட் -ஆலையின் விரிவாக்கத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இசைவாணையும் பெற்றள்ளது.
விரிவாக்கம் செய்வதற்கான கருத்துக் கேட்புக் கூட்டம் முறையாக நடைபெறவில்லை. தனியார் திருமண மண்டபத்தில் கருத்துக் கேட்கும் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் எழுந்த பெரும் எதிர்ப்புக் குரலின் விளைவாக பாதியிலேயே கூட்டத்தை முடித்துக் கொண்டார்கள்.
இரண்டாம் கட்ட போராட்டம்
இத்தகைய பின்னணியில்தான்அ.குமரெட்டியாபுரம் மக்கள் இந்த விரிவாக்கப் பணிகளுக்கு எதிராகவும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும் 2018 பிப்ரவரி ஆம் தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுத்தனர். பிப்ரவரி 12 ஆம் தேதி முதல் அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் இன்றோடு 46 நாட்களாக (28.03.2018) தொடர்ந்து காத்திருக்கும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில்கடந்த மார்ச் 24 இல் தூத்துக்குடியில் போராட்டக்குழு சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதற்கு காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. உயர்நீதி மன்றத்தில் அனுமதி பெற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. சுமார் 30 ஆயிரம் பேர் – ஆண்களும்பெண்களும் பங்கேற்றுள்ளனர்.

அரசு நிர்வாகம் யார் பக்கம்?

‘‘எங்கள் கிராமத்தில் உள்ள மக்களுக்கு ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வரும் நச்சுப்புகையினால் கேன்சர்குழந்தைகளுக்கு பிரைமெரி காம்ளக்ஸ்கிட்னி செயல் இழப்புஇரத்தச் சோகைகண்பார்வை குறைபாடுகால்களில் கொப்பளங்கள் ஏற்பட்டு நடக்க முடியாமல் போவது உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன. குறைந்த வயதில் திடீர் இறப்புக்கள் ஏற்படுகின்றன. எங்கள் ஊரில் தண்ணீர் கசப்பாகவும்பழுப்பு நிறத்திலும் உள்ளன. ஆடுமாடுகள் இந்தத் தண்ணீரை குடிப்பதால் கருச்சிதைவு ஏற்பட்டு குறைப் பிரசவம் நடந்துள்ளது. எங்கள் பகுதியிலுள்ள தண்ணீரை ஆய்வு செய்ய கொடுத்தால் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள மறுக்கின்றனர்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைத்தியம் செய்ய சென்றால் அ.குமரெட்டியாபுரம் என்று சொன்னால் முறையாக சிகிச்சை செய்வது கிடையாது. நாங்கள் போராட்டம் நடத்த பந்தல் போடுவதற்குக்கூட சிப்காட் காவல்துறை அனுமதி மறுக்கிறது’’ என்கின்றனர் கிராம மக்கள் 
தொகுப்பு :
முகவை அப்துல்லாஹ் !