Sunday 13 May 2018

டிடிவி தினகரனை நெருங்கும் தமிழக காங்கிரஸ் ..!





    

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் டிடிவியை நெருங்கி வருகிறது என ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டு வருகின்றன ..!
தமிழக காங்கிரஸ் கட்சியை பலபடுத்தும் முயற்சியில் ராகுல்காந்தி மாநிலத்திற்கு நான்கு செயல்தலைவர்களை நியமிக்க இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் தனித்து போட்டியிட விரும்பவில்லை; கூட்டணி கட்சிகளுடன் இணைந்து போட்டியிட விரும்புகிறது. எனவே, கூட்டணி கணக்கை மையப்படுத்தி, பீட்டர் அல்போன்ஸ், வசந்தகுமார், முருகானந்தம், கராத்தே தியாகராஜன், ஜெயகுமார் ஆகியோரில், நான்கு பேரை, செயல் தலைவர்களாகவும், ஒருவரை, மாநில தலைவராகவும் நியமிக்கும் புது திட்டத்தை, ராகுல் செயல்படுத்த உள்ளார்.
        இதனால், மாநில தலைவர் பதவியை விரும்பும், மூத்த தலைவர்கள் சிலர், அதிருப்தி அடையலாம். அவர்களுக்கு, அகில இந்திய செயலர் பதவி வழங்கி சரிக்கட்டவும் முடிவு செய்துள்ளார்.





காங்கிரஸ் எம்.எல்.ஏ டிடிவி தினகரனை சந்தித்து பேசியது அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தினகரனுடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விஜயதாரணி, தினகரனின் மாமியார் சந்தானலட்சுமியின் மறைவு குறித்து, அரசியல் பாரபட்சமின்றி துக்கம் விசாரிக்க அவரை சந்தித்தேன். மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக, அதிமுகவின் செயல்பாட்டை தீர்மானித்து, நடைமுறைபடுத்தி வருகிறது. இன்று அதிமுகவை நசுக்கி வேடிக்கை பார்க்கும் பாஜக, நாளை திமுகவையும் இதேபோல் செய்யும் என்பதில் சந்தேகமே இல்லை. தமிழகத்தில் திராவிட கட்சிகளை அழிப்பதற்கு பாஜக திட்டம் தீட்டிக்கொண்டு, அதை செயல்படுத்த தீவிரமாக இறங்கியுள்ளது. தமிழகத்தில் பாஜக காலூன்ற நினைத்தால் அது அந்த கட்சிக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும். தமிழக மக்கள் பாஜகவின் நிழலைக் கூட விரும்பமாட்டார்கள். பாஜகவை எதிர்க்க அனைத்து கட்சிகளும் ஒன்று சேர வேண்டும். தமிழகத்தில் மத பிரவேசத்தை பாஜக துவங்க நினைக்கிறது. அதற்கு, எக்காரணம் கொண்டும் இடம் தரக்கூடாது என்று பேசினார்.


       தமிழகத்தில், தி.மு.க.,வுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடுவதையே, ராகுல் விரும்புகிறார். ஆனால், தமிழக காங்., தலைவராக உள்ள திருநாவுக்கரசர், தினகரன் கட்சியுடன் சேர்ந்து போட்டியிட விரும்புகிறார். மொத்தத்தில், வெற்றி கூட்டணியில், காங்கிரஸ் இடம்பெற வேண்டும் என்பதையே, ஒட்டுமொத்த காங்கிரஸ் கோஷ்டி தலைவர்களும் விரும்புகின்றனர். அதனால், அதை செயல்படுத்தக் கூடியவர்களை, செயல் தலைவர்களாக நியமிக்க, ராகுல் முடிவு செய்துள்ளார். என  கட்சி வட்டாரங்கள் கூறியதாக பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன ..!

-    
     இந்நிலையில் தினகரன் தரப்பில் இருந்து எந்த ஒரு அறிவிப்புகளும் வரவில்லை..! 
     முகவை அப்துல்லாஹ்


No comments:

Post a Comment