Monday 14 May 2018

தினகரனும் - திருமாவளவனும்..!



தினகரனும் திருமாவளவனும் ,

திருமாவளவனுடன் சசிகலா அம்மையாரின்  சந்திப்பு!   

ஜெயலலிதா அம்மையார் மறைவுக்கு பின் போயஸ் தோட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் திருமாவளவன் .
சசிகலாவுடனான சந்திப்பை தேர்தலுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டாம். ஜெயலலிதாவிற்கு பிறகு துணிந்து பொறுப்பை ஏற்றுக் கொண்டதை வரவேற்கின்றோம். அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது.



 பெண்ணுரிமைக்கான இயக்கம் விடுதலை சிறுத்தைகள் என்பதால் அதிமுகவின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள, சசிகலாவுக்கு வாழ்த்து தெரிவித்தேன். தமிழகத்தில் ஜாதி சார்பற்ற அரசியலை நடத்துவோம் என சசிகலா உறுதி அளித்ததை வரவேற்கிறோம்.
என  திருமாவளவன் தெரிவித்தார்.
அரசியல் நோக்கர்கள் அப்போதைய அந்த சந்திப்பை அதிமுகவுடன் விடுதலை சிறுத்தைகள் தேர்தல் கூட்டணி அமைக்க முன்னெடுக்கிறது என்றே விமர்சித்தனர்.

கட்சி மீது ஜாதி முத்திரை விழுந்து விடக்கூடாது என்பதால்  விடுதலை சிறுத்தைகள் போன்ற தலித் ஆதரவு கட்சியுடன் இணைந்து நடைபோடுவது நல்லது என்பது சசிகலா திட்டம் வகுத்துள்ளதாக அப்போது கூறப்பட்டது.

நடராஜன் அவர்கள் சென்னை தனியார் மருந்துவமனையில் நோய்வாய்பட்டிருந்த பொழுது  அவரை சந்தித்திருந்தார் திருமாவளவன்.

ஜெயலலிதா அம்மையாரின் உருவப்பட திறப்பிற்கு திருமா பகிரங்க ஆதரவு :

தமிழக சட்டசபையில் ஜெயலலிதா அம்மையாரின் திரு உருவ பட திறப்பிற்கு தமிழக எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தன.
“ ஜெயலலிதா அம்மையார் மக்களின் பெரும் செல்வாக்கு பெற்ற முதல்வராக பலமுறை தமிழகத்தை ஆண்டவர், ஏற்கனவே ஜெயலலிதாவின் சமாதி மெரினாவில் அமைக்க கூடாது என தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது , ஜெயலிதாவின் உருவப்படம் சட்டசபையில் திறப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தனது ஆதரவை தெரிவிக்கிறது” என ஊடகங்களில் பகிரங்க பேட்டி அளித்தார் திருமாவளவன்.
   

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரும் காங்கிரசின் சார்பில் ஆதரவை தெரிவித்தார்.
  
நடராஜன் நினைவேந்தல் நிகழ்ச்சியில் சசிகலா மற்றும் நடராஜனுக்கு திருமாவளவன் புகழாரம் :

தஞ்சாவூரில்  நடராஜனின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் நடராஜனின் படம் திறந்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில்  கலந்து கொண்டு பேசிய திருமாவளவன், முரண்பாடு உள்ளவர்களை நேர்மறையாக அணுக கூடியவர் நடராஜன்,எம்.ஜி.ஆருக்கு பிறகு அ.தி.மு.க வை காப்பற்றியது ஜெயலலிதா.  ஆனால் ஜெயலலிதாவை காப்பாற்றியது நடராஜன் குடும்பம், இவர்கள் இல்லையென்றால் ஜெயலலிதாவே இல்லை, அ.தி.மு.க எடுத்த முடிவுகளுக்கு பின்னால் இருந்த ஆளுமை நடராஜன். ஜெயலலிதாவை மிகச்சிறந்த ஆளுமையாக உருவாக்கியது நடராஜன் குடும்பம் தான்,ஜெயலலிதாவின் தோழமைக்கு இன்றும் மதிப்பளிப்பவர் சசிகலா, நம்பிக்கைக்கு பாத்திரமாக திகழும் குடும்பம் நடராஜன் குடும்பம் நடராஜன் சிறந்த சாணக்கியராக விளங்கியதாகவும் அவரை கண்டு அரசியல் களம் நடுங்கியது,அ.தி.மு.கவுடன் வி.சி.கவும், ம.தி.மு.கவும் கூட்டணி வைக்க காரணம் நடராஜன் தான் என அவர் கூறினார்.



நீட் தேர்வில் உயிழந்த அனிதாவின் குடும்பத்திற்கு ரூ 15 லட்சம் நிதயுதவி அளிக்க திருமாவளவனை அழைத்து சென்ற தினகரன் :

மருத்துவ கனவுகளுடன் படித்த நீட் தேர்வின் அழுத்தத்தால் அரியலூர் மாவட்ட சாதனை மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார்.அவரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறவும் பாதிகப்பட்ட அந்த குடும்பத்திற்கு நிதயுதவி அளிக்கவும் தினகரன் திருமாவளவனை அழைத்துக்கொண்டுதான் சென்றார்.
திருமாவளவனுக்கு  தலித் மக்களிடம் இருக்கின்ற செல்வாக்கை நன்றாக உணர்ந்திருக்கிறார் தினகரன். அந்த நிகழ்வின் பொழுது பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் திருமாவளவனுடன் தேர்தல் கூட்டணி அமைப்பீர்களா என்றே பல ஊடகங்களும் கேள்விகால தினகரனை துளைத்தன.

    
சமீபத்தில் அமமுகவின் அமைப்பு செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ மேலூர் சாமியின் மறைவிற்கு அஞ்சலி செலுத்த சாமியால் வளர்க்கப்பட்ட லோக்கல் அதிமுக எம்.எல்.ஏ பெரியபுள்ளானே வந்திராதபோது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதோடு இறுதி சடங்குகள் முடியும் வரை தினகரனுடன் இருந்தார் . மறைந்த மேலூர் முன்னாள் எம்.எல்.ஏ சாமி தினகரனின் நாடித்துடிப்பு போல    
இருந்தவர் என்பதை திருமாவளவன் அறிந்திருந்தார்.

ஆர்பாட்டத்தில் கைது செய்யப்பட்ட திருமாவளவன் உட்பட அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்த தினகரன்:

கடந்த மார்ச் மாதம் தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அருகே தீபாம்பாள்புரம், மருவத்தூர் ஆகிய இடங்களில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை கண்டித்து எதிர்ப்பு போராட்டக்குழு சார்பில் முற்றுகை போராட்டம் நடந்தது.

இதில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேலமுருகன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைதான தலைவர்கள்  அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.இந்த நிலையில் கைதான திருமாவளவன், வேல்முருகன், ஜவாஹூருல்லா , பாலகிருஷ்ணன் ஆகியோரை அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேரில் சந்தித்து பேசினார்.
  

திருமாவளவன் தினகரன் அரசியல் நட்பும்  புரிந்துணர்வும் தேர்தல்  கூட்டணியாக வாய்ப்புள்ளது என்பது உறுதி ..!

No comments:

Post a Comment