காங்கிரஸ்
தலைமை விசிக ,கம்யூனிஸ்ட் 2019 லோக்சபா தேர்தல் கூட்டு :
ஸ்டாலின்
மூன்றாவது அணி முயற்சிக்கு செக் வைக்கும் தந்திரிகள் ..!
மக்களின்
நாடித்துடிப்பை அறியாத மங்குனி அமைச்சராக ஸ்டாலின்..!
.
திமுக தலைமையிலான அணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் மூன்றாவது
அணிக்கான பேச்சுவார்த்தைகளை திமுக முன்னெடுத்து வருவது காங்கிரஸ், இடதுசாரிகளை அதிருப்தி அடைய வைத்துள்ளது.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை திமுக, அதிமுகவின் தோள்களில்தான் நீண்டகாலமாக சவாரி செய்து வருகிறது. கடந்த 15 ஆண்டுகாலமாக திமுக அணியில்தான் காங்கிரஸ் இருந்து வருகிறது. திமுக தலைவர் கருணாநிதியை ராகுல் காந்தி தமிழகம் வந்த போது கண்டுகொள்ளாமலேயே இருந்த காலங்களும் உண்டு. ஆனாலும் திமுக- காங்கிரஸ் கூட்டணி உடைந்தது இல்லை.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை திமுக, அதிமுகவின் தோள்களில்தான் நீண்டகாலமாக சவாரி செய்து வருகிறது. கடந்த 15 ஆண்டுகாலமாக திமுக அணியில்தான் காங்கிரஸ் இருந்து வருகிறது. திமுக தலைவர் கருணாநிதியை ராகுல் காந்தி தமிழகம் வந்த போது கண்டுகொள்ளாமலேயே இருந்த காலங்களும் உண்டு. ஆனாலும் திமுக- காங்கிரஸ் கூட்டணி உடைந்தது இல்லை.
சிறுத்தைகளுடன்
திமுகவிலிருந்து வெளியேறும் காங்கிரஸ் :
தற்போதைய
நிலவரமே வேறாகிவிட்டது.திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கழுத்தை பிடித்து
வெளியே தள்ளுகிறார்கள். காங்கிரஸோ சிறுத்தைகளையும் இழுத்துக் கொண்டு வெளியே
போகிறது. டெல்லியில் விறுவிறு ஆலோசனை இது தொடர்பாக கடந்த சில நாட்களாக டெல்லியில்
தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
டெல்லி
மேலிடம் கொடுத்த கிரீன் சிக்னலால் திமுகவை மிரட்டும் வகையில் திருநாவுக்கரசர்
பேட்டியளித்தார்.ராகுல் காந்தியை திருமாவளவனும் சந்தித்தார். இச்சந்திப்பில்
திமுகவின் நிலை குறித்து விரிவாக விவாதித்துள்ளனர். பின்னர் தினகரனின் பலம்; தினகரனுடன் இணைந்து கூட்டணி அமைக்கலாம் என்கிற
திருநாவுக்கரசரின் யோசனை குறித்தும் திருமாவளவனிடம் ராகுல் கேட்டிருக்கிறார்.
காங்.
தலைமையில் மெகா கூட்டணி
அதிமுகவின்
தொண்டர்கள், தினகரன் பக்கம் இருப்பதாக திருமாவளவன் தரப்பு
கூறியிருக்கிறது. மேலும் தமிழகத்தில் இடதுசாரிகளுடன் தாங்கள் இணக்கமாக இருப்பதால்
காங்கிரஸ் தலைமையில் ஒரு வலுவான கூட்டணியை உருவாக்க முடியும் என நம்பிக்கையை
வெளிப்படுத்தினாராம் திருமாவளவன்.
திருமா
திமுக கூட்டணியை வெறுப்பது ஏன் ..?
“விடுதலை சிறுத்தைகள் இயக்க
முன்னணி சகோதரர்களை 1997_ல் தி.மு.க. அரசு குண்டர்
சட்டத்தில் கைது செய்தது. அதனால்தான் நாம் தேர்தல் அரசியலுக்கு வந்தார்கள். 2009_ல் ஈழப்போராட்டம் உச்சத்தில்
இருந்தபோதும் வி.சி. தோழர்கள் பலரை தி.மு.க. அரசு கைது செய்தது.” இருந்த போதிலும் நெடுங்காலமாக தி.மு.க.
கூட்டணியிலேயே இருந்தது விடுதலை சிறுத்தைகள் கட்சி. விழாக்களில் உரிய
மரியாதையில்லை, தேர்தலில் உரிய தொகுதி ஒதுக்கப்படவில்லை என்று ஆயிரம்
குறைகள் இருந்தாலும் கருணாநிதியுடனான திருமாவின் புரிதல் விடுதலை சிறுத்தைகளை அந்த
அணியில் ஒட்டியிருக்க வைத்தது.
2001 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்டது
விசிக. மங்களூரில் போட்டியிட்ட திருமாவளவன் சட்டப்பேரவை உறுப்பினரானார். ஆனால், திமுக
தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிய அரசியல் மதிப்பைத் தர மறுக்கிறது என்று
குற்றஞ்சாட்டிய திருமாவளவன், தனது எம்எல்ஏ பதவியை உதறிவிட்டு, 2004-ல்
கூட்டணியிலிருந்து வெளியேறினார்.
2004 மக்களவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், புதிய தமிழகம், மக்கள் தமிழ்த் தேசியம் போன்ற
கட்சிகளுடன் இணைந்து மக்கள் கூட்டணியை உருவாக்கினார். தேர்தலில் தோற்றாலும், சிதம்பரம் தொகுதியில் இரண்டரை
லட்சம் வாக்குகளை திருமா அள்ளினார்.
2006 தேர்தலில் விசிக தி.மு.க.வில் சேர நினைத்தபோது ‘விடுதலைச் சிறுத்தைகளுக்குக் கூட்டணியில் இடமில்லை’ என கலைஞர் சொன்னார். விசிக காத்திருந்தது பாமகவுக்காகத்
தான், திமுகவுக்காக அல்ல.ஆனால் பாமக உள் ஒதுக்கீடு தந்தால்
வரவேற்போம் என கருணாநிதி கூறினார் .“பந்தியில் இடமில்லை, எச்சிலை சாப்பிடு என்பதற்கு சமம் என
கருணாநிதியை சாடினார் திருமாவளவன்.
கசப்புக்களையே
மடியில் கட்டிகொண்டிருந்த விசிக தி.மு.க. அணியிலிருந்து வெளியேறி வைகோவின்
மக்கள் நல கூட்டணியில் இணைந்தது. பெரும் தோல்வியை கண்டது. அடுத்து உள்ளாட்சி
தேர்தலிலும் மக்கள் நல கூட்டணியிலேயே நீடித்து தொகுதி பங்கீடு கண்டது. ஆனால் அந்த
தேர்தல் ரத்தானதன் பின் மக்கள் நல கூட்டணியும் உடைந்து சிதறியது.
மீண்டும்
திமுக :
ஸ்டாலின்
தரப்பில் ஆத்மார்த்தமான வரவேற்பு இல்லாவிட்டாலும் கூட ஏற்றுக் கொண்டார்கள். அவரை
பொறுத்தவரையில் அ.தி.மு.க.வுக்கு எதிராக முடிந்தளவுக்கு படை திரட்ட வேண்டும்
என்பதே இலக்கு. ஆகையால் திருமாவையும் வைத்துகொண்டார்.
தி.மு.க.வை
நோக்கிய திருமாவின் இந்த யூ டர்ன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின்
தளகர்த்தர்களுக்கு பிடிக்கவில்லை. வன்னியரசு உள்ளிட்ட சிலர் திருமாவிடம் இதை
வெளிப்படையாகவே பகிர்ந்தனர். ஆனால் ‘நாம் நடத்துவது இயக்கமல்ல, கட்சி. தேர்தல் அரசியலை ஏற்றுக் கொண்டிருக்கிறோம். சில
நெளிவு சுளிவுகள், அணுசரணைகள் அவசியம்.’ என்று சமாதானப்படுத்திவிட்டு ஸ்டாலினின் நட்புக்கு அழுத்தம்
கொடுக்க துவங்கினார். அதேவேளையில் தி.மு.க.வின் தளகர்த்தர்களுக்கும் திருமாவின்
மீள் வருகையில் விருப்பமில்லை.
கருணாநிதியின்
வைரவிழா நிகழ்வு :
இந்நிலையில்தான்
வந்தது கருணாநிதியின் வைரவிழா நிகழ்வு. திருமாவின் பெயர் அழைப்பிதழில் இல்லாதது
அவருக்கும், அவரது இயக்கத்தினருக்கும் மிகப்பெரிய
வருத்தத்தை கொடுத்தது. ஆனாலும் கடந்து சென்றார்கள் அந்த பிரச்னையை.
இந்நிலையில்தான் தி.மு.க.வினரே தி.மு.க.வுடனான திருமாவின் நட்புக்கு சமூக வலைதளங்கள் வழியே ஆப்பு வைக்க துவங்கினர். ‘திருமாவை மீண்டும் கூட்டணியில் இணைக்கும் அவசியம் நமக்கில்லை தளபதி!’ என்று டேரிங்காகவே கருத்துக்களை பதிவு செய்தனர். அவர்களின் ஆவேச பதிவுகள் வி.சி.க்களுக்கு ஆதங்கத்தை தந்தாலும் திருமாவின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு அமைதி காத்தனர். திருமாவோ ‘இந்த பதிவுகளுக்கு ஸ்டாலினின் ரியாக்ஷன் என்னவென்று பார்த்துவிட்டு முடிவு செய்யலாம்.’ என்றிருந்தார். ஆனால் ஸ்டாலினிடமிருந்து எந்த கண்டிப்பும் வரவில்லை. இது திருமாவை வெகுவாக பாதித்தது.
இந்நிலையில்தான் தி.மு.க.வினரே தி.மு.க.வுடனான திருமாவின் நட்புக்கு சமூக வலைதளங்கள் வழியே ஆப்பு வைக்க துவங்கினர். ‘திருமாவை மீண்டும் கூட்டணியில் இணைக்கும் அவசியம் நமக்கில்லை தளபதி!’ என்று டேரிங்காகவே கருத்துக்களை பதிவு செய்தனர். அவர்களின் ஆவேச பதிவுகள் வி.சி.க்களுக்கு ஆதங்கத்தை தந்தாலும் திருமாவின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு அமைதி காத்தனர். திருமாவோ ‘இந்த பதிவுகளுக்கு ஸ்டாலினின் ரியாக்ஷன் என்னவென்று பார்த்துவிட்டு முடிவு செய்யலாம்.’ என்றிருந்தார். ஆனால் ஸ்டாலினிடமிருந்து எந்த கண்டிப்பும் வரவில்லை. இது திருமாவை வெகுவாக பாதித்தது.
அதிமுக
கொண்டாடும் திமுக - திருமா பிளவு :
ஸ்டாலின்
மற்றும் திருமா இருவருக்கும் இடையில் விழுந்துள்ள இந்த பள்ளத்தாக்கு பிளவால் அ.தி.மு.க.
பூரிப்பில் உள்ளனர். அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பெரும் தலித் வாக்கு வங்கி
இருக்கிறது. ஆனால் ஜெயலலிதா இல்லாத நிலையில் இதில் பெரும் பகுதி திருமா வழியே
தி.மு.க. கூட்டணிக்கு போய்விடுமோ என்பது அ.தி.மு.க.வின் அச்சமாக இருந்தது. ஆனால்
இந்த பிளவின் மூலம் அவர்கள் சந்தோஷப்பட்டுள்ளனர்.
திமுக
விரும்பும் 2019 லோக்சபா மூன்றாவது அணி கூட்டணி :
திமுக
தலைமையிலான அணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் மூன்றாவது
அணிக்கான பேச்சுவார்த்தைகளை திமுக முன்னெடுத்து வருவது காங்கிரஸ், இடதுசாரிகளை அதிருப்தி அடைய வைத்துள்ளது.
திருமா
கம்யூனிஸ்ட் காங்கிரஸ் கூட்டணி நிலைப்பாடு :
லோக்சபா
தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான அணியில்தான் போட்டி என்று தற்பொழுது திட்டவட்டமாக
அறிவித்திருக்கிறார் திருமாவளவன்.
மூன்றாவது
அணியை தொடக்கம் முதலே எதிர்க்கும் சீதாராம் யெச்சூரியை திருமாவளவன் சந்தித்தார்.
பின்னர் ராகுல் காந்தியை சந்தித்து திமுவுக்கு செக் வைக்கும் பேட்டியை அளித்தார்
திருமாவளவன். அவரது இந்த நடவடிக்கைகளும் பேட்டிகளும் திமுகவை கடும் அதிருப்தி அடைய
வைத்துள்ளது என்கின்றன அறிவாலய வட்டாரங்கள். பாஜக, காங்கிரஸ் அணிகளால்தான் மத்தியில் ஆட்சி அமைக்க முடியும் என
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் திமுகவிற்கு எதிராகவே
கூறியிருக்கிறார்.
திருமாவின்
காங்கிரசு உடனான 2019 லோக்சபா தேர்தல் கூட்டணி
கருத்துக்கள்
வலுவான வாக்கு வங்கியைக் கொண்டுள்ள காங்கிரஸை
உள்ளடக்கிய மதச்சார்பற்ற கூட்டணியால்தான் பாஜகவை வீழ்த்த முடியும். காங்கிரஸ்
அல்லாத கூட்டணி உருவானால், இக்கூட்டணியின் வாக்குகள் சிதறி, மீண்டும் பாஜக ஆட்சிக்கு வரும் நிலை
உருவாகிவிடும். எனவே, காங்கிரஸ் தலைமையில் மதச்சார்பற்ற கூட்டணி அமைந்தால், அதில் விசிக இடம்பெறும். காங்கிரஸ் அல்லாத
மதச்சார்பற்ற கூட்டணி அமைந்தால் அதில் விசிக இடம்பெறாது என்று திருமாவளவன்
கூறியுள்ளார். மேலும் ‘‘மத்தியில் கூட்டணியில் இருந்தால்தான்
மாநிலத்தின் நலன்களைப் பாதுகாக்க முடியும் என்கிற நோக்கில் தேசிய கட்சிகளோடு கூட்டணி வைக்க வேண்டியது
அவசியமாகிறது. மற்றபடி மாநிலங்களில் தேசியக் கட்சிகள் பெரும் தேய்வைத்தான்
சந்தித்து வருகிறது. அதனால் அவர்கள் மாநிலங்களில் அதிகாரம்
செலுத்துவார்கள் என பயப்படத் தேவையில்லை.’’ என்கிறார்.
ராகுல்காந்தி, திருமாவளவன் சந்திப்பு :
வன்கொடுமை தடுப்புச் சட்டத்துக்கு எதிரான உச்ச
நீதிமன்ற தீர்ப்பைக் கண்டித்து டெல்லியில் மே மாதம் முதல் வாரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச்
சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பிறகு காங்கிரஸ்
தலைவர் ராகுல் காந்தியையும் சந்தித்து சந்தித்து , வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை வலுவாக்குவதற்காக தேசிய
அளவில் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தியதற்கு நன்றி தெரிவித்தார்.
‘தேசம் காப்போம்’ என்ற பெயரில் தமிழ்நாட்டில் வரும் ஜூன் மாதம்
விசிக கட்சி சார்பில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அவருக்கு அழைப்பு
விடுக்கப்பட்டது,அவரும்
மாநாட்டுக்கு வருவதாக உறுதி அளித்தார்.
மதச் சார்பற்ற சக்திகளின் வாக்குகள்
சிதறக்கூடாது. எனவே, காங்கிரஸை உள்ளடக்கிய மதச்சார்பற்ற கூட்டணி அமைக்க வேண்டும்
என்று கேட்டுக் கொண்டார்.
கம்யூனிஸ்ட் டெல்லி தலைவர்களுடன் திருமா
சந்திப்பு :
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தேசிய பொதுச்
செயலாளர் சீதாராம் யெச்சூரியை திருமாவளவன் சந்தித்துப் பேசினார்.
சீதாராம் யெச்சூரியிடம் பேசும்போது, ‘தேசிய அளவில் மதச் சார்பற்ற
சக்திகளை ஒருங்கிணைக்கும் வேலையை இந்தமுறை தவறவிடக் கூடாது. மறுபடியும் மதவாத
சக்திகள் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது. மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைப்பதில்
இடதுசாரிகளுக்குத்தான் கூடுதல் பொறுப்பு இருக்கிறது. அதற்கான முயற்சியில் ஈடுபட
வேண்டும்’ என்று திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கம்யூனிஸ்டுகளின் தேர்தல் நிலைப்பாடு :
“ தி.மு.க கூட்டணியைத் தேர்தல் நேரத்தில்
தீர்மானிக்கலாம்! “
மார்க்ஸிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள
கே.பாலகிருஷ்ணன், சிதம்பரம்
தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்தவர். லாக்கப் படுகொலைகள், பெண்களுக்கு எதிரான அநீதிகள் என
எல்லாவற்றுக்கும் எதிராக மனித உரிமைக் களங்களில் பல போராட்டங்களை நடத்தியவர்.
விவசாயிகள் பிரச்னைகளுக்காகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருபவர்.
சமீபத்திய
நிருபர் சந்திப்பில்..,
‘‘தி.மு.க வுடன் கூட்டணியா, இல்லையா என்பதெல்லாம் தேர்தல்
வரும்போது தீர்மானிக்கப்பட வேண்டிய விஷயம். அப்போது யார் என்ன நிலையில்
இருக்கிறார்கள் என்பதையும், சூழ்நிலையையும் பொறுத்தது.
எங்களைப் போன்ற கட்சிகள் நிரந்தரமாகக் கூட்டணி என்ற முடிவுக்கு வரமுடியாது என்று பூடகமாக பதில்
அளித்துள்ளார்
தி.மு.க
கூட்டணியில் தொடர்ந்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நீடிக்குமா?
மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22-வது மாநில மாநாடு 2018 பிப்ரவரி 17 முதல் 20 வரை 4 நாள்கள் நடைபெற்றது. மத்திய அரசியல் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், மோடி அரசைக் கடுமையாக
விமர்சித்தார். ‘‘ இந்த 4 ஆண்டு கால ஆட்சியில் பயனடைந்தவர்கள் கார்ப்பரேட்
நிறுவனத்தினர் மட்டுமே. பி.ஜே.பி அரசை வீழ்த்துவதுதான் நமது குறிக்கோளாக இருக்க
வேண்டும். பி.ஜே.பி-க்கு எதிராக அனைத்துத் தரப்பினரையும் போராட்டக்களத்துக்குக்
கூட்டிவர வேண்டும். இதன்மூலம்தான் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில்
பி.ஜே.பி-யை வீழ்த்த முடியும். திராவிடக் கட்சிகளில் அ.தி.மு.க குழப்பத்திலும் தி.மு.க
தேக்கத்திலும் உள்ளது.
‘‘மோடி ஆட்சியில் வட்டியுடன்
சேர்த்து வங்கிகளின் வாராக்கடன் 11 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. டெல்லியில் அரை
நிர்வாணக் கோலத்தில் தொடர் போராட்டம் நடத்திய விவசாயிகளை மோடி கண்டுகொள்ளவே இல்லை.
இந்தியாவின் மொத்த விவசாயக் கடனே ரூ.80 ஆயிரம் கோடிதான். அதற்குப்
பணம் இல்லை எனச் சொன்ன மோடி, கார்ப்பரேட் கம்பெனிகளின் ரூ.2 லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்துள்ளார். பி.ஜே.பி-யின்
துணைக்கிரகமாகவும் ஜால்ரா போடும் அரசாகவும்தான் அ.தி.மு.க அரசு இங்கு செயல்பட்டு
வருகிறது. இரண்டு அரசுகளையும் விரட்டியடிக்க வேண்டும்’’ என்றார்.
பிரகாஷ் காரத்தின் பேச்சு தி.மு.க-வினரை எரிச்சலடைய
வைத்துள்ளது. திருச்சி சிவா “ தி.மு.க தேக்கம் அடைந்து
விட்டதாகக் கூறுவது, இணைந்து செயல்படுவதை சீர்குலைக்கும் விதத்தில் உள்ளது’’ எனக் கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைமையில் தமிழகத்தில் 2019 லோக்சபா தேர்தல் கூட்டணிக்கு விசிக , கம்யூனிஸ்ட்
கட்சிகளின் மூலம் அச்சாரம் போடப்பட்டுள்ளது.
மக்களின் நாடித்துடிப்பை அறியாத மங்குனி அமைச்சராக ஸ்டாலின்
வலம் வருகிறார் தவறான கற்பனையான நிர்வாகத்திறனால் சிகரம் ஏறவேண்டிய திமுகவின்
பயணம் பாதாளம் நோக்கி பாய்கிறது ..!
முகவை அப்துல்லாஹ்
No comments:
Post a Comment