செயலை சந்திக்கும்
மய்யம்.. ! பின்னணி என்ன ..?
2019 – பாராளுமன்ற லோக்சபா தேர்தல் கூட்டணிக்கு காய் நகர்த்தும் தமிழக கட்சிகள் :
________________________________________________________________
முரசொலி விழா ,
காவிரி போராட்டம் – ஆசீர்வாதம் வாங்க செல்கிறேன் என இரண்டு மூன்று முறை என மாதம்
ஒரு முறையாவது இருவரின் அரசியல் சந்திப்புகளும் ஊடங்கங்களில் வெளி வருகிறது ..!
உள்ளுக்குள் எப்படி பேசுகின்றார்களோ ..? கமல் – ஸ்டாலின் கூட்டு இலகுவாகும் வாய்ப்பு
உள்ளது.
கணிசமான வாக்கு
வங்கியை வடமாவட்டங்களில் வைத்துள்ள ராமதாஸின் இணக்கம் தொடரவே செய்கிறது
ஸ்டாலினுக்கு ..! நீட் எதிர்ப்பு குரல் , காவிரி மேலாண்மை வாரிய அமைப்பில்
பிஜேபியின் தில்லு முல்லு என பாமக வின் குரல் பிஜேபியின் பக்கம் தாங்கள் இல்லை என
பறை சாற்றுகிறது !
பாமக + திமுக கூட்டு
உறுதி.
திமுகவின் சிறுபான்மையினர்
பிரிவான மமக , முஸ்லிம் லீக் இரண்டு முஸ்லிம் கட்சிகளிடமும் தேர்தல் செலவுக்கு பணம் இல்லை ..! அதனால்
அவர்கள் ஸ்டாலினை விட்டு போகமாட்டார்கள் ..! பெரும்பான்மை முஸ்லிம் முகலாக்கள் ,
பள்ளிவாசல் ஜமாத்துகள் முஸ்லிம் லீக் நிர்வாகிகளிடமே உள்ளது ..!
ஜவாகிருல்லாஹ்வை
பொறுத்தவரை, ஸ்டாலின் தொடர்பு கொள்ள இணக்கமானவர் , காரியம் எளிமையாக சாதித்து
கொள்ளலாம் ..! மமகவின் கூட்டணி குறித்து ஸ்டாலின் இதுவரை வாயை திறக்கவில்லை என்றாலும் கனிமொழிக்கு மேலவை
தேர்தலில் வாக்களித்தது இவருக்கு கூட்டணி ஏற்படுத்தும்.திமுகவிடம் இருந்து தேர்தல் செலவுக்கு பணம் வராதே .. என்ன செய்ய போகிறார் ஜவாகிருல்லாஹ்
..?
திமுக + மமக கூட்டணி டவுட் என்றாலும்
ஜவாகிருல்லாஹ் டெல்லி
செல்ல முடிவெடுத்து ஜெர்கின் எல்லாம் ஆர்டர் கொடுத்து உள்ளாராம் ..! என்றாலும்
திமுகவினர் கடைசி நேரத்தில் எங்கும் பாயலாம் இந்த தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் என ஸ்டாலினின் காதில்
ஓதியதாக தெரிகிறது ..!
எனவே திமுக + மமக +
முஸ்லிம் லீக் இன்றைய நிலவரப்படி கூட்டு உறுதி ..!
ரஜினி – பிஜேபி - அதிமுக
– கிருஷ்ணசாமி தேர்தல் கூட்டு :
ரஜினியின் செலவாக்கு 150 தொகுதியில் உள்ளது என பிஜேபியின் கூட்டணிக்கு
ரஜினிக்கு தினமலர் தூபம் போடுகிறது!
துக்ளக் குருமூர்த்தி ஓப்பனாகவே ரஜினியை பிஜேபிக்கு
அழைக்கிறார்!
OPS-EPS இரட்டையர்கள் வைத்துள்ள அதிமுகவை ஏற்கனவே பிஜேபி கைபற்றி விட்டது.
அனிதா நீட்டில் தற்கொலை செய்துகொள்ள கிருஷ்ணசாமி சார்ந்த தலித் மாணவி பாதிக்கபட்டுள்ள நிலையிலும் குறைந்த பட்ச மனிதாபிமா குரல் கூட
கொடுக்காமல் .. நீட்டிற்க்கு ஆதரவாக பேசி மத்திய அரசுக்கு ஒத்துழைத்தார்!
கற்பனைதான்
என்றாலும் இதே போன்று ஒரு கூட்டணி அமையவே வாய்ப்பு உள்ளது ..!
சீட்டுகள் பகிர்வில் முன்
பின் இருக்கலாம்..!
கட்சிகள் தங்களின்
வெற்றி வாய்ப்பை உறுதி செய்து கொண்டு தங்களுக்கு வழங்கப்பட்ட தொகுதிகளில் வெற்றி
வாகை சூட கடினமாக உழைக்க வேண்டும் ..!
கட்சியின் திறன், எத்தனை சீட்டுகள் ஒதுக்கப்பட்டது என்பதல்ல.., எத்தனை தொகுதிகளை வெற்றி கொண்டோம்
என்பதிலேயே உள்ளது.
வேட்பாளர் தேர்வில்
கவனம் செலுத்தினால் போதும் எந்த தொகுதியிலும் வெற்றி பெற முடியும்.
மக்கள் நல்ல
வேட்பாளருக்கே வாக்களிக்கும் மனநிலையில் உள்ளனர்.
1.
காங்கிரஸ் தலைமையில் ..,
2.
காங்கிரஸ் - தலைமை 15
3.
தினகரன் ( அமமுக ) 10
4.
கம்யூனிஸ்டுகள் ( இரண்டும் ) 5
5.
விஜயகாந்த் ( தேமுதிக ) 3
6.
வைகோ ( மதிமுக ) 2
7.
விசிக ( திருமாவளவன் ) 2
சில தலித் அமைப்புகள்
8.
சில முஸ்லிம் கட்சிகள் (SDPI) 1
9.
சரத்குமார் ( சமத்துவ மக்கள் கட்சி ) 1
பாண்டிச்சேரி (
காங்கிரஸ் ) 1
( ஆள் அம்பு சேனை என்று எதிரிகள் அதிரி புதிரியாகும்
கூட்டணி இதுவாகும் )
_______________________________________________________________________
2. தேர்தலுக்கு பின் காணமல்
போகும் கூட்டணி :
1.
பாஜக – தலைமை = 24
2.
ரஜினி கட்சி =
10
3.
புதிய தமிழகம் கிருஷ்ணசாமி = 2
4.
பிற உதிரி சாதிக் கட்சிகள் = 3
பாண்டிச்சேரி ரஜினி கட்சி = 1
( பிஜேபியின் அனைத்து
மாநில முதலமைச்சர்களும் திரண்டு வருவார்கள் பிரசாரத்திற்கு )
_____________________________________________________________________-
3
. மூன்றாவது அணி
1.
திமுக – தலைமை 20
2.
பாமக 10
3.
கமல் ( மய்யம் ) 5
4.
முஸ்லிம் லீக் 2
5.
ஜவஹிருல்லாஹ் 2
( மமக )
பாண்டிச்சேரி
( பாமக ) 1
திமுக கூட்டணியின் (பிரசாரத்திற்காக காங்கிரஸ் + பிஜேபி
அல்லாத பிற மாநில கட்சிகளின் தலைவர்கள் வருவார்கள் )
No comments:
Post a Comment