Sunday, 13 May 2018

நினைவிடம் பீனிக்ஸ் பறவையா ..பிராய்லர் கோழியா ..?


எரித்து சாம்பல் ஆக்கினாலும் உயிர்த்து வருமாம்  பீனிக்ஸ் பறவை .. அம்மையார் ஜெயலலிதாவும் தான் வாழும் வரை அப்படி ஒரு அரசியல் பீனிக்ஸ் ஆகத்தான் இருந்தார் ..! அவரை பிராய்லர் கோழியாக்க  தற்பொழுதைய அடிமை அரசு முயற்சிக்கிறது ..! 


ஏற்கனவே தலைமை கழக அலுவலக வாளாகத்தில் திறக்கப்பட்ட ஜெயலலிதா அம்மையாரின் திருவுருவ சிலை எடப்பாடியின் மனைவி போலவே தோற்றம் இருப்பதாக நெட்டிசன்கள் ஆட்சியாளர்களை வருத்தெடுத்தனர்.


இப்பொழுது    

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மையாருக்கு நினைவிடம் அமைக்க தமிழக அரசு அடிக்கல் நாட்டியது ..!
அது பீனிக்ஸ் பறவையை போல இருக்குமாம் ..!








நீங்க முதல்ல திறங்க அது பீனிக்ஸ் பறவையா இல்ல பிராய்லர் கோழியான்னு நாங்க சொல்றோம்னு ..
நெட்டிசன்கள் அம்பு எய்ய காமடி கலவரம் ஆனது வலை உலகம்.
 


செய்திக்கு வருவோம் ..!  

தினகரனிடம் சேர துடிக்கும்  தமிழக அமைச்சர்கள்..!

ஜெயலலிதா நினைவு மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி மே 7-ம் தேதி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் கலந்துகொண்டனர். அன்று மாலையே திடீரென மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தலைமைக் கழகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.


கூட்டத்தில் கலந்துகொண்ட மூத்த நிர்வாகி ஒருவர், “இதுவரை நான்கு முறை உறுப்பினர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டும், நிர்வாகிகள் யாரும் ஆர்வம் காட்டவில்லை. பலரும் தினகரன் அணிக்குத் தாவும் மனநிலையில் உள்ளனர். உறுப்பினர் சேர்க்கை இதுவரை இவ்வளவு மந்தமாக இருந்ததில்லை. உட்கட்சிப் பூசல்தான் இதற்கெல்லாம் காரணம்என்கிறார்.

தலைமைக் கழகத்திலிருந்து ஏழு லட்சத்து 90 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை ஒரு லட்சத்து 30 ஆயிரம் விண்ணப்பங்கள் மட்டுமே பூர்த்தி செய்யப்பட்டு வந்துள்ளன.

ஜெயலலிதா காலத்தில் ஒன்றரை கோடியாக இருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை இரண்டு கோடியாக உயர்த்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து முழக்கமிட்டார்கள். ஆனால், பழைய உறுப்பினர்களிலேயே நிறைய பேர் தங்கள் உறுப்பினர் அட்டையைப் புதுப் பித்துக்கொள்ளவில்லை என்பது தெரிகிறது.

‘‘அ.தி.மு.க-வில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் அணிகளுக்குள் நடக்கும் மோதலால் தொண்டர்களின் மனது  தொங்கலில் உள்ளது’’ என்கின்றனர் மூத்த நிர்வாகிகள்.

அணிகள் இணைந்த பிறகு எங்களுக்கு உரிய முக்கி யத்துவம் தரப்படுவதில்லைஎன்று பன்னீர் அணியினர் புலம்ப ஆரம்பித்தனர்.

ஒன்றிணைந்து சில மாதங்களில் பன்னீர் அணியின் முக்கியப் பொறுப்பில் இருந்த மைத்ரேயன், ‘அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லைஎன ஃபேஸ்புக்கில் போட்டது நினைவிருக்கலாம்.

கூட்டுறவுச் சங்கத் தேர்தலிலும் பன்னீர் அணியினர் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.




அமையவிருக்கும் அம்மையாரின் நினைவிடம்
கூட்டத்தில் எடப்பாடி அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவுக்கும் தென்சென்னை மாவட்டச் செயலாளர் சத்யாவுக்கும் இடையே எடப்பாடி முன்னிலையிலே கடும் வாக்குவாதம் நடந்தது.

  மேடையில் இருந்த கோகுல இந்திரா, “மாவட்டச் செயலாளர் என்ன நினைப்பில் இருக்கிறார்? முன்னாள் அமைச்சர் நான். என் பெயரைக்கூட எந்த நிகழ்ச்சியிலும் போடுவதில்லை. என் பகுதியிலிருந்து கட்சி நிர்வாகிகளைக் கூட்டி வந்துள்ளார். அதைக்கூட என்னிடம் சொல்லவில்லை. பேனர் வைக்கும் நிர்வாகிகளிடம், என் போட்டோவைப் போடக் கூடாது என்று சொல்லியுள்ளார். இவருக்கு இந்த அதிகாரத்தைக் கொடுத்தது யார்?” என கொதித்தார்

, எடப்பாடி எழுந்து, ‘‘அமைதியாக இருங்கள் பேசிக்கொள்ளலாம்எனத் தடுத்துள்ளார்.

அ.தி.மு.க-வில் உறுப்பினர் சேர்க்கை முதல், உட்கட்சி பூசல் வரை உச்சகட்டத்தை எட்டிவிட்டது.
ஒபியும் ஈபியும் எந்தப் பூசலும் வராமல் நாற்காலியை கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வருகிறார்கள்.




    முகவை அப்துல்லாஹ்



No comments:

Post a Comment