Thursday, 17 May 2018

தென் மாவட்டங்களை வளைக்கும் தினகரன் ..!


தென் மாவட்டங்களில் தினகரன் கொடி பறக்கிறது .!
நெல்லை,கன்னியாகுமரி,தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களில் தினகரன் கை நாளுக்கு நாள் ஓங்கி வருகிறது . 
குமரி மாவட்ட முன்னாள்  அமைச்சரும் தற்போதைய குமரி மாவட்ட செயலருமான பச்சைமால் தலைமையில் களியக்காவிளை முதல்,காவல் கிணறு வரை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு வார்டு கமிட்டி கிளை கழகம் ஒன்றியம் மாவட்ட பொறுப்புகளுக்கு திறமையானவர்களை 




கண்டறிந்து அவர்களுக்கு பொறுப்புகள் வழங்கியதோடு அவர்களின் ஒத்துழைப்போடு பிரமாண்டமான பொதுக்கூட்டம்  ஒன்றை நடத்தி தினகரனை திணறடித்து விட்டார் . மீனவ மக்கள் இடையே அதிகப்படியான செல்வாக்கை  பெற்றுள்ள பச்சைமால் மீனவ மக்களின் ஆதரவையும் தினகரன் பக்கம் கொண்டு வந்து விட்டார்.குறிப்பாக அதிமுகவின் மருத்துவ அணி இணை செயலாளர் ஜோசை கழகத்தில் இணைத்து விட்டார் பச்சைமால்  இதற்கு காரணம் அதிமுக மாவட்ட செயலர் விஜயகுமார் தொண்டர்களை அனைத்து செல்லவில்லை என்று கூறப்படுகிறது .

முத்து நகர் தூத்துக்குடி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தெற்கு மாவட்ட செயலாளர் ஹென்றி . அனைத்து சட்டமன்ற தொகுதிகளில் உள்ள தொண்டர்களையும் டிடிவி பக்கம் கொண்டு  வந்து விட்டார்.இதில் தானா சேர்ந்த கூட்டம்தான் அதிகம் , மக்கள் உயிரோடு விளையாடும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான கூட்டத்தில் தூதுக்குடியையே அதிர வைத்து விட்டார்கள்.



ஸ்டெர்லைட் எதிர்ப்பு அமமுக பொதுக்கூட்டம் விகடன் செய்தியில் 


தினகரனுடன் ஹென்றி ஒன் தமிழ் செய்தி 

தந்தி டிவி யில் 

 கூட்டுறவு சங்க தேர்தலில் அநியாயத்தை தட்டி கேட்டதற்காக  போலிஸ்காரர்களால் பொய் வழக்கு போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் ஹென்றி.கடந்த எட்டாம் தேதி சிறையை விட்டு அவர் வெளியே வந்தபோது தொண்டர்களும் பொது மக்களும் பிரமாண்டமான வரவேற்ப்பு கொடுத்து எதற்கும் துணிந்தவர்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் என்பதை காட்டினார்கள். 
 தினகரன் பேரவை தூத்துக்குடி மாவட்ட செயலரான சொர்ணலட்சுமியும் மக்கள் செலவர் புகழ் பரப்பி ஏராளமானவர்களை
 டிடிவி கட்சியில் இணைத்து வருகிறார் . 
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை மாநகர் மாவட்ட செயலராக இருப்பவர் கல்லார் வேலாயுதம் பொறுமை  திறமை என கலக்குபவர்  முன்னால் அமைச்சர் நயினார் நாகேந்திரன் கூடாரத்தில் பாடம் பயின்றவர் ..மாநகரத்தில் டிடிவிக்கு தனி செல்வாக்கினை  கொண்டு வந்து விட்டார் .


பாப்புலர் முத்தைய்யா 


நெல்லை புறநகர் மாவட்டதின்  மாவட்ட செயலராக இருப்பவர் பாப்புலர் முத்தையா அவைத்தலைவராக இருப்பவர் பொய்கை மாரியப்பன் மாவட்ட துணை செயலாரக இருப்பவர் வி பி மூர்த்தி இப்படி பல ஜாம்பவான்கள் இருப்பதால் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் இல்லங்களின்  சுக துக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருவதால் தொண்டர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள் . தென் மாவட்டதினை  பொறுத்தவரை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினரின் செல்வாக்கு உயர்ந்து வருகிறது.



கீழே செய்திகள் :
நன்றி : தமிழக அரசியல் வார இதழ் 
19/05/2018 நிருபர் . எம் .ரமேஷ் .


தமிழக அரசியலில் வார இதழில் தென் மாவட்டங்களில் அமமுக வின் செல்வாக்கு பற்றிய கட்டுரை 


No comments:

Post a Comment