2008 ல் பிஜேபி வென்ற 110 இடங்கள் மட்டுமே இப்போதும் கைப்பற்றி உள்ளது ..!
மக்களின் காங்கிரஸ் ஆட்சி மீதான அதிருப்தி பிஜேபிக்கு அதிக இடங்களை தந்துள்ளது ..!
ஜனதாவுடன் கூட்டணி அமைத்திருந்தால் பிஜேபி வாஷ் அவுட்தான்
காங்கிரசுக்கு தோல்வி என்று ஒன்றும் இல்லை ..!
நிலக்கரி ஊழல் மிகப்பெரிய குற்றச்சாட்டாக வெடித்தது அப்போது . ஊழல் குற்றவாளியாக எடியூரப்பா இகழ்ச்சிக்கு உள்ளானார் ..!
மோடி பிரதமராவதற்கு பகிரங்க எதிர்ப்பு தெரிவித்தவர்!
எடியுரப்பாவின் கர்நாடக ஆளுமையை சிதைக்கவே தன் நண்பர் வாஜ்பாயி வாலாவை கர்நாடகா கவர்னராக ஆக்கினார்.
மோடியின் ஆர்எஸ்எஸ் பாடம் எடியுரப்பாவை பழிவாங்காமல் விட்டு வைத்துள்ளது ..!
தேர்தலுக்கு முன்பாகவே ஜனதாவுடன் கர்நாடகாவில் காங் கூட்டு வைத்திருந்தால் பிஜேபியை நாக் அவுட் செய்திருக்கலாம் ..!
கர்நாடகாவில் மட்டுமல்ல ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில கட்சியினை ஆதரித்தால் மட்டுமே காங்கிரஸ் வாழும் .. இதை ராகுலும் மாநில காங்கிரசாரும் உணர வேண்டும் ..!
இல்லை என்றால் வரலாற்றை உருவாக்கிய காங்கிரஸ் எதிர்கால வரலாற்றை இழக்க நேரிடும் ..!
தமிழகத்தில் சரியான தோழமை கட்சியை இனம் கண்டு பயணிக்க வேண்டிய கட்டாயம் தமிழக் காங்கிரசுக்கு இருக்கிறது ..!
முகவை அப்துல்லாஹ்
15/05/2018.
4:33 PM
No comments:
Post a Comment