Thursday, 17 May 2018

காங்கிரசை கலாய்க்க பிஜேபிக்கு வாழ்த்து சொன்ன ஸ்டாலின்..!


இளம் தலைமுறைதான் மீம்சுகள் வரைகிறார்கள் ..! அவர்களின் எழுத்தும் வீச்சும் அதன் பொருளும் ஆழமும் பொதுமக்களை எளிதாக கவர்கிறது ..
இடியாக எதிரிகளின் இதயத்தை துளைத்தும்  விடுகிறார்கள்!
இந்த மீம்சுகள் அனைத்தும் நகைச்சுவையுடன் நாட்டுமக்களின் நலன் சார்ந்ததாக நாட்டின் நலம் சார்ந்ததாக இருப்பதே அதன் வரவேற்புக்கு காரணம்

அண்மையில் அமைச்சர் ஜெயக்குமார் ,அக்கா தமிழிசை ஆகியோர் மீம்சுகைன் ரவுசுகளால் மீடியாக்களிடமே  புலம்பி அழுததை கண்டு தமிழகமே கண்டு விழுந்து விழுந்து சிரித்தது !

தற்பொழுது மீம்சுகளுக்கு தீனியாக செயல் தலைவர் ஸ்டாலின் ஆகிவிட்டார்.

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் விவசாயிகள் போராட்டம் செய்து கொண்டிருக்கும் இந்த வேளையில் திமுகவும் கண்டன ஆர்பாட்டங்களை நடத்துகிறது ..!

கமல் நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்திலும் கலந்து கொள்வேன் என்று அறிக்கையும் விட்டிருக்கிறார் அண்ணாத்த ஸ்டாலின் ..!

காவேரி மேலாண்மை வாரியம்  அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக திமுகவும் அனைத்து கட்சி கூட்டம் நடத்த தீர்மானித்து இருந்தது.

இவ்வேளையில் கர்நாடாகாவில் தேர்தல் முடிவுகள் பிஜெபிக்கி
சாதகமாக வர
எல்லோரையும் முந்திக்கொண்டு முதலாவது ஆளாக ஸ்டாலின் வாழ்த்துக்களை சொல்கிறார் ..!

மாலையில் நிலவரம் கலவரம் ஆக வாக்கு எண்ணிக்கை தடம் புரள்கிறது காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்புகள் உருவாகும் சூழலும்  சொற்ப எண்ணிகையில் பிஜேபி மேஜாரிட்டியையும் தவற விடுகிறது ..!

பிஜேபிக்கு எதிராக மத்திய அரசினை கண்டித்து போராட்டங்கள் ஆர்பாட்டங்கள் நடத்திக்  கொண்டிருக்கும் இந்த வேளையில்
அந்த கட்சியே ஜெயித்து வருகிறது .. அதற்கு வாழ்த்து  சொல்லலாமா ?
இதுதான் அரசியல் முதிர்ச்சியா ..?

அது போதாதா நம்ம குறும்புக்கார அரசியல் விமர்சக மீம்ஸ் குழந்தைகளுக்கு ..!
 
அதிமுகவினர் தமிழக அமைச்சரவை மத்திய அரசுக்கு அடிமை சாசனம் எழுதிவிட்டார்கள் என்றே தமிழகம் கருதுகிறது , நீட் மேலாண்மை வாரியம் என தமிழ்நாடே தினம் ஒரு போராட்டமாக கொந்தளித்து இருக்க துணை தர்மயுத்தம் ops  தன் முதலாளி மோடிக்கு விசுவாசம் காட்ட வாழ்த்து சொல்கிறார் .. அதில் ஒரு அர்த்தம் இருக்கிறது .. அதர்மத்திலும் ஒரு தர்மம்...

ஸ்டாலின் பிஜேபிக்கு வாழ்த்து சொன்னது ஏன் ? என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி ..?

தற்பொழுது கர்நாடகாவின் சட்டமன்ற தேர்தலில் பிஜேபி மெஜாரிட்டி பெரும் முன்னரே ..,  வாக்கு எண்ணிக்கை தொடங்கி முன்னிலையில் இருக்கிறது என்ற முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையிலே வாழ்த்துக்கள் சொல்லி காமடி கவுண்டன் ஆகிவிட்டார் நம்ம ஸ்டாலின் ..!

அரசியல் முதிர்ச்சி இல்லை ஸ்டாலினுக்கு என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள் ..! ஒரு மாநில கட்சியின் தலைவர் பொறுப்பில் இருப்பவர் இப்படி அவசர குடுக்கையாக இருக்க கூடாது என்று கருத்து தெரிவித்து உள்ளார்கள் ..!

நெட்டிசன்கள் செயலை நாள்முழுதும் வறுத்து எடுத்து விட்டார்கள் ..!

செயலுக்கு அத்தனை அரசியல் ஞானம் எல்லாம் இல்லை இருந்திருந்தால் வாக்கு எண்ணிக்கையின் போதே வாழ்த்துக்களை சொல்லி இருக்க மாட்டார் !
செயலின் வாழ்த்துக்கள் என்பது உள்ளார்ந்ததல்ல.. உதட்டளவில் ஆனது ..!
காங்கிரசுடன் கூட்டணி அமைக்காமல் மூன்றாவது அணி அமைத்தால் .., நாடாளுமன்ற தேர்தலில் கூடுதல் சீட்டுகள் வெல்லலாம் .. உதிரி புத்திரி கட்சிகளுடன் கூட்டணி வைத்துகொண்டு எளிதாக வென்று விடலாம் .. மக்கள் அதிமுகவின் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள் .., பிஜேபிக்கு தமிழகத்தில் எதிரியே நோட்டோதான் ..! ஆக சோலோவாக திமுக ஜெயிக்கலாம் என மனப்பால் குடிக்கிறார் ..



இந்த நேரத்தில் கர்நாடகாவில் காங்கிரஸ் தோற்கிறது .. !
காங்கிரசை கலாய்க்க இது சரியான சந்தர்ப்பம் .., என்றுதான் முந்திரிக்கொட்டையை விட கூடுதல் வேகமாக முந்திக்கொண்டு  வாழ்த்துக்களை அள்ளி வழங்கினார் ..!

கர்நாடகாவில் நிலவரம் கலவரமாகி தமிழகமே பிஜேபியின் தரங்கெட்ட அரசியலை விமர்சிக்க .. காங்கிரஸ் மீது பெருத்த அனுதாபம் தமிழக மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது ..!

திருடனுக்கு தேள் கொட்டியது போல் ஆகிவிட்டது செயலுக்கு ..!
கர்நாடகாவின் கவர்னரின் குள்ள நரித்தனத்தை  விமர்சிக்க ஸ்டாலினால் முடியவில்லை ..,
தமிழக மக்களிடம் நானும் அரசியல் வாதிதான்  நானும் ரவுடிதான்னு கூட சொல்லமுடியவில்லை ..!

கடைசில மீடியாவுக்கு கைப்புள்ள ஆகிட்டாரு ஸ்டாலின் ..! லேட்டஸ்ட் மீம் என்ன தெரியுமா ?

பாண்டிச்சேரில நாராயண சாமி முதல்வரு
தமிழ் நாட்டுல பழனிசாமி முதல்வரு
அவ்வளவு ஏன் ..
கர்நாடகாவுல குமாரசாமி கூட முதல்வரு  ..!
ஆனா
நம்ம கைப்புள்ள ஸ்டாலின்   கனவுல கூட  முதல்வர்  ஆகமுடியாது..!

எப்பிடி எல்லாம் கலாய்கிறாங்க ..!
ஹய்யோ ஹய்யோ ..!
ஸ்டாலின் பழமொழிகள் ஞாபகம் வருகிறது ..! 
குரங்கு பிடிக்க பிள்ளையார் ஆனது ...! ஹஹஹா

 முகவை அப்துல்லாஹ் ..!


No comments:

Post a Comment