Sunday, 13 May 2018

ஆளும்கட்சி வேட்டை, திவாகரன் அம்பு ,சூழ்ச்சி வலையை அறுத்தெடுத்த தினகரன் .!


தினகரன் – திவாகரன் என்ன நடந்தது உறவுகளுக்குள்..? ஏன்..?
சசிகலா அம்மையாரின் உடன் பிறந்த தம்பிதான் திவாகரன்.அவரின் மகன் ஜெயானந்த்.சமீபத்தில் மன்னார்குடியில் அ.தி.மு.க அம்மா அணி என்ற அமைப்பினை தொடக்கி அவரது வீட்டிலேயே ஒரு அலுவலகத்தைத்திறந்து வைத்தார் திவாகரன்
அதன் பிறகு சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் இருக்கும் தனக்குச் சொந்தமான வீட்டில் வந்து தங்கி டெல்டா பகுதி அமைச்சர்களான ஆர்.காமராஜ், ஓ.எஸ்.மணியன், துரைக்கண்ணு ஆகியோரை ரகசியமாகச் சந்தித்து உள்ளார்,

தினகரன் பக்கம் உள்ள ஆதரவாளர்களை அவரிடமிருந்து பிரித்து உங்கள் பக்கம் கொண்டுவர வேண்டும். அதைத்தான் முதல்வர் எடப்பாடி விரும்புகிறார்என மூவரும் கூறியதாக தெரிகிறது .
இந்த சந்திப்புக்குப் பிறகு உற்சாகமாகி திவாகரனும், அவரின் மகன் ஜெயானந்தும், தினகரன் அணியைச் சேர்ந்தவர்களிடம் போன் மூலம் தனித்தனியாகப் பேசிஉள்ளார்கள்.
‘‘எங்கள் பக்கம் வந்து விடுங்கள். எதற்கும் பயப்பட வேண்டாம். எல்லாவற்றையும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். கட்சிக்காகச் செலவு செய்து உங்கள் பொருளாதாரத்தை பார்த்துக் கொள்கிறோம், உரிய மரியாதை கொடுக்கப்படும்’’ எனப் பல வாக்குறுதிகளை வாரிவழங்கியுள்ளனர்.
அவர்கள் ஜெயானந்திடம் உங்கள் அப்பா திடீரென பரபரப்பாக அரசியல் நகர்வுகளில் ஈடுபடுவார். பிறகு அப்படியே மாதக்கணக்கில் அமைதியாகி விடுவார். தொடர்ச்சியாக அரசியலில் இயங்க மாட்டார் நீங்க அதற்கு சரிப்பட மாட்டீங்க.., தினகரனே மாற்று அவரே தலைவர் அவரை விட்டு வருவோம் என மனப்பால் குடிக்காதீர்கள்’ என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லி விட்டனர்.
   

மே 8-ம் தேதி தினகரன் பெங்களூரு சென்று சிறையில் சசிகலாவைச் சந்தித்தார். திவாகரன் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திவருகிறார். பிரிந்து கிடப்பவர்களை ஒன்றுசேர்த்து தனிக்கட்சியாகச் செயல்படுவேன், நேரம் வரும்போது தாய்க் கழகத்தில் இதை இணைத்துவிடுவேன்என நம் ஆதரவாளர்களிடம் பேசிவருகிறார்.
உங்களை (சசிகலா) அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக ஏற்பதற்கு எடப்பாடியும் பன்னீரும் தயாராக இருப்பதாகவும் கூறிவருகிறார்.

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது அ.ம.மு.க . தஞ்சை டெல்டா விவசாயிகளுடன் தினகரன். 

குறுகிய காலத்தில் பெரிய அளவில் கட்சியை வளர்த்துள்ளேன். அதனால், என்னைக் கண்டு அவர்கள் பயப்படுகிறார்கள் . அதனால்தான், எனக்கு எதிராகப் பேசுகிறார்கள்.
 நம் குடும்பத்துக்காகவும் கட்சிக்காகவும் உழைக்கும் நான், எல்லோருக்கும் எதிரியாக இருக்கிறேன்.
என்னை விட்டு விடுங்கள். என் வழியை நான் பார்த்துக்கொள்கிறேன்’’ என சற்றுக் கோபமாகவே சொல்லியிருக்கிறார். 

எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக் கொண்ட சசிகலா, ‘‘எல்லாப் பிரச்னைகளும் சரியாகும் நேரத்தில் நாம் இருக்கிறோம். உன்னைக் கைவிட்டு விட மாட்டேன். பொறுமையாக உன் வேலைகளைப் பார்’’ என்று சமாதானம் சொல்லி தினகரனை அனுப்பி வைத்துள்ளார்.
 அன்றைய தினம் பெங்களூருவிலேயே தங்கிய தினகரன், மறுநாள் மேலூர் சென்றுவிட்டார். 

சசிகலாவை தினகரன் சிறையில் சந்தித்தபிறகு, தங்களின் அடுத்த மூவ் குறித்து தன் ஆதரவாளர் களுடன் ஈக்காட்டுத்தாங்கல் வீட்டில் மே 9-ம் தேதி திவாகரன் ஆலோசனை நடத்தினார். அப்போது, ஜெயானந்த்தும் உடன் இருந்துள்ளார்.அப்போது, ஆளும்தரப்பிலிருந்து தனக்குக் கொடுக்கப்பட்ட அசைன்மென்ட் குறித்தும், ஆட்சியாளர்களிடம் தனக்குக் கிடைக்கும் மரியாதை குறித்தும் பெருமையுடன் சொல்லி அனைவரையும் குஷிப்படுத்தியிருக்கிறார் திவாகரன்.

‘‘ஆளும்தரப்பிலிருந்து நமக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுக்கப்படுகிறது. எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டுதான், கட்சிப் பணிகளை செய்துவருகிறோம்  ஆனால், குடும்பத்தினர் சிலரே அவமானப்படுத்துகிறார்கள். நமக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருக்கிறது. கட்சிக்குப் பெரிய எழுச்சியும் இருக்கிறது. நம்மை நம்பி வந்தவர் களைக் கைவிட்டுவிடக்கூடாது. கட்சியினரையும் தாண்டி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை பொதுமக்களிடம் கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொள்ள  தன் ஆதரவாளர்களுடன் தினகரன் ஆலோசித்து வருகிறார்.

ஆளும் கட்சி வட்டாரத்தில் ‘‘எடப்பாடியும் பன்னீரும் இணைந்து கட்சியையும் ஆட்சியையும் நன்றாகத்தான் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இரட்டை இலையும் எங்களிடம்தான் உள்ளது. கட்சி அலுவலகமும் எங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. பிறகு ஏன் நாங்கள் திவாகரனுடனும் சசிகலாவுடனும் சமாதானமாகப் போக வேண்டும்? அம்மாவுக்கு துரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் கட்சிக்குள் அனுமதிப்பதற்கு வாய்ப்பில்லை’’ என வாய்க்கொழுப்புடன் பேசி வருகின்றனர்.
 சசிகலா அம்மையாரின் வழக்கறிஞர் திவாகரனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.   14 பக்கங்கள் அந்த நோட்டீஸில், தனது புகைப்படத்தையோ, பெயரையோ மீறி பயன்படுத்தினால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உடன்பிறந்த சகோதரி சசிகலா என்று ஊடகங்களில்  பேசுவதை திவாகரன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், உண்மைக்கு மாறாக தொடர்ந்து ஊடகங்களில் பேசுவதை நிறுத்த வேண்டும் என்றும், நோட்டீசை பெற்றுக்கொண்ட பின்னரும் மீறி நடந்தால் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளார். 

திவாகரன் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு "உறவினர்களை விட தொண்டர்கள் முக்கியம் எனக்கு என தினகரன் தெரிவித்தது  தொண்டர்களை  மேலும் குஷியாக்கி உள்ளது .

- முகவை அப்துல்லாஹ் 

No comments:

Post a Comment